டெல்லி: பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீடு தொகையை தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1.42 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீட்டு தொகையை தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார்.
இது தொரப்பாக மக்கலவையில் உரையாற்றிய அவர்; 2023 டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன. எனினும் பயிர்க் காப்பீடு செய்த தூத்துக்குடி விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டு தொகை வரவில்லை. பயிர்க் காப்பீடு செய்தவர்கள் இழப்பீடு பெறும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் வறட்சியோ, வெள்ளமோ ஏற்பட்டால்தான் இழப்பீடு தரப்படும் என்ற விதியை தளர்த்தவும் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.