நாமகிரிப்பேட்டை: தகாத உறவில் ஈடுபட்டிருந்த விவசாயி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த வைரபாலிக்காட்டை சேர்ந்தவர் விவசாயி ரவி (55). மனைவி இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அல்லிமுத்துவின் மனைவி வசந்தாவுக்கும் (45) ரவிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அல்லிமுத்து கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தா வீட்டிற்கு ரவி சென்றுள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது திடீரென அல்லிமுத்து வந்துவிட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ரவி நெஞ்சு பகுதியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அல்லிமுத்து அவரது மனைவி வசந்தா ஆகியோர் தப்பிவிட்டனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து அல்லிமுத்து மற்றும் அவரது மனைவி வசந்தாவை தேடிவருகின்றனர்.