இந்திய விமானப் படையில் குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர்: 8 இடங்கள். தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. மெஸ் ஸ்டாப்: 7 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட மெஸ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. சமையலர் (ஒஜி): 12 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய உணவுகளை தயார் செய்வதில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு வருட கேட்டரிங் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
4. லோயர் டிவிசன் கிளார்க்: 14 இடங்கள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
5. ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்: 31 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹவுஸ் கீப்பிங் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பல்நோக்கு பணியாளர்: (சவுகிதார்): 53 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான பணிகளை செய்யும் வகையில் ஆரோக்கியமான உடற்திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது வாட்ச்மேன்/லஸ்கர்/கார்டனர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. ஸ்டோர்கீப்பர்: 16 இடங்கள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஸ்டோர்கீப்பர் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
8. கார்பென்டர்/பெயின்டர்/வல்கனைசர்/லாண்டிரிமேன்: 10 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரரின் உடற்தகுதி, ெதாழிற்திறன் மற்றும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ரீசனிங், ஆங்கில மொழி ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
www.indianairforce.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.06.2025.