சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் வந்தது. அப்போது, சென்னையை சேர்ந்த 30 வயதுடைய ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, 99 கேரட் தங்கத்தாலான போல்ட்கள், நட்டுகள் சிக்கியது. சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தங்க போல்ட், நட்டுகள் மீது கிரே கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. சுமார் 900 கிராம் எடை கொண்ட தங்க போல்ட், நட்டுகளின் மதிப்பு ரூ.85 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தங்க போல்ட்கள், நட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சென்னை பயணியிடம் தங்க கடத்தல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விமானத்தில் ரூ.85 லட்சம் தங்க போல்ட், நட்டுகள் பறிமுதல்: சென்னை பயணி கைது
0