கோவை: .சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் கஞ்சா கடத்தி வருவதாக விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் நேற்று பயணம் செய்தவர்களைன அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணி வைத்திருந்த பேக்கில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் கவர், பாக்கெட்களில் 2.2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.1.01 கோடி. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்தனர்.