நாகை: விழுந்தமாவடி, வானமாமகாதேவி ரூ.12 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். வேதாரண்யம் தலைஞாயிறில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.250 கோடியில் சிப்காட் அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும். நாகை நகராட்சி கட்டிடம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும். சென்னை நங்கநல்லூரில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.