புதுச்சேரி: மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக் கோரி காரைக்கால் மீனவர்கள் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகள் மீனவர்கள் உடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.