செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மீனவ சமூகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி அளிக்கப்படும் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள் செய்தி குறிப்பில் கூறியரப்பதாவது: மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன் வளம்-மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 2023-24ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (நிuவீபீமீறீவீஸீமீs) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்ப படிவங்களை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், எண்.2/601 கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலங்காரை (ஐஸ் பேக்டரி பஸ் நிறுத்தம்) சென்னை 600 115 என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 93848 24247, 98433 05513 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.