கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமப் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடற்கரையோரம் வலைகள் உலர வைக்கும் செட்டில் நள்ளிரவுக்கு மேல் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் பலருடைய மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து கருகின. அப்பகுதி மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். விபத்து குறித்து சுசீந்திரம் காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.