மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவக்கரை மீனவ கிராமம் உள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், நானும் மீனவ பெண் தான். நான் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்று வீர வசனம் பேசி நேற்று அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு திரண்ட மீனவ மக்கள் காளியம்மாளை உள்ளே வரக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அப்போது காளியம்மாள் நானும் மீனவ பெண்தான் உங்கள் பிரச்னை எனக்கும் தெரியும். எனக்கு வாக்களியுங்கள் நான் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என கூறியுள்ளார். இதற்கும் மீனவ மக்கள் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் நம்ப போறதா இல்லை. நீ இங்கிருந்து கிளம்பு என கூறியுள்ளனர். வேறு வழியின்றி களியம்மாள் வந்த வேகத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார்.