மதுரை: ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு அழைத்துவர ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு ஈரானில் இருக்கும் மீனவர்கள் அங்கிருக்கும் தூதரகத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
0