டெல்லி: மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். மீனவர்களை பாதுகாக்க உடனடியான உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துள்ள நிலையில் நோட்டீஸ் அளித்தார். மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தினார்.
மீனவர் பாதுகாப்பு: காங். ஒத்திவைப்பு நோட்டீஸ்
previous post