திருத்துறைப்பூண்டி:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்று. எல்லையில் இந்திய கடற்படை கப்பலை நிறுத்தினால் இதுபோன்ற பிரச்னைக்கு இடமில்லை.
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி போன்றவைகளை இந்தியா வழங்கி வருவது ஏற்புடையதல்ல. ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் வாக்குகளை மட்டும் வேண்டும் என்கின்றனர். பிரதமர் மோடி பார்க்காத நாடுகளை பார்ப்பதற்காக, உக்ரைன் சென்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.