சென்னை: குமரி மீனவர் பெத்தாலிஸை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். பெத்தாலிஸை சிலர் கடத்திச் சென்றதாகவும் உடனடியாக கண்டுபிடிக்கவும் அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பெத்தாலிஸை மீட்டு தாயகம் கொண்டு வர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.