சென்னை: மீன்வளத்துறையில் பல வாய்ப்புகள் உள்ளன என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் வேளாண்மை ஆளுமைகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். எண்ணித் துணிக என்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பேசினார். அண்டை மாநிலமான ஆந்திரா மீன்வளத்துறையில் தமிழகத்தை விட முன்னணியில் உள்ளது. விளைபொருட்களை உற்பத்தி செய்யும் முன் அதற்கு தேவை உள்ளதா என்பதை விவசாயிகள் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.