ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (26), மீன் வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, கடந்த சில நாட்களாக சரண்ராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால், தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டதால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில், இரவு முழுக்க குடித்து விட்டு, அதிகாலை வீட்டில் சரண்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.