சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.207 கோடியே 90 லட்சத்தில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.697 கோடி ஆகும். அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பணிமனைகளிலும், உரிய கட்டிட உட்கட்டமைப்பு, மின்னேற்றம் செய்வதற்குரிய கட்டுமான பணிகள் மற்றும் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் குளிர்சாதனமில்லா பேருந்து 200 கி.மீ. இயங்கும். இந்த பணிகள் அனைத்தும் தற்ேபாது முடிவடைந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக போக்குவரத்து கழகங்களில் வியாசர்பாடி மின்சார