ஸ்ரீஹரிக்கோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை நாளை நடைபெறுகிறது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் நாளை காலை 8 மணிக்கு சோதனை நடைபெறவுள்ளது. மாதிரிவிண்கலம் தரையிலிருந்து 16.6கிமீ தூரம்வரை அனுப்பப்பட்டு வங்கக்கடலில் இறக்கப்படும். வெறும் 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு பெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது