பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்கார் உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். உஸ்மான் கவாஜா 47 ரன், டிராவிஸ் ஹெட் 59 ரன், கேப்டன் கம்மின்ஸ் 28 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நடையை கட்டியதால் ஆஸி. அணி முதல் இன்னிங்சில் 56.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5, ஷமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை இழுந்து ரன் சேர்கக முடியாமல் தடுமாறியது. பிரத்வைட் 4, ஜான் கேம்பெல் 7, கேசி கார்டி 20, ஜோமல் வார்ரிகன் 0 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்களை பறி கொடுத்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவருக்கு 4 விக்கெட்களை இழந்து 57 ரன் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் 1, அறிமுக வீரர் பிராண்டன் கிங் 23 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார்.