சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்தமுள்ள 1.79 இடங்களில் இதுவரை 19,922 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கம்பியூட்டர் என்ஜினியரிங் (CSE) படிப்பில் 4,879 பேரும், எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் (ECE) படிப்பில் 2,704 பேரும் சேர்ந்துள்ளனர்.