தேர்தலுக்கான வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் மே 22, 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.