மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்கள் திமத் கருணரத்னே 2, நிஷான் மதுஷ்கா 4 ரன்னில் வெளியேற, அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். குசால் மெண்டிஸ் 24, ண்டிமால் 17, கமிந்து மெண்டிஸ் 12, பிரபாத் 10 ரன்னில் அவுட்டாகினர். பொறுப்புடன் விளையாடிய தனஞ்ஜெயா 74 ரன் (84 பந்து, 8 பவுண்டரி) விளாசி பஷிர் பந்துவீச்சில் லாரன்ஸ் வசம் பிடிபட்டார். இலங்கை 66 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்திருந்தது. மிலன் ரத்னாயகே 66 ரன், விஷ்வா 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 3, அட்கின்சன், பஷிர் தலா 2, வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.