சென்னை: கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல கோயில் விழாக்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமே முதல் மரியாதைதான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளைவிட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சி என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் முதல் மரியாதை கோரி தேவராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
கோயில் விழாக்களில் முதல் மரியாதையை நிறுத்த ஆணை
0