இம்பால்: மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் நேற்று மீண்டும் புதிதாக வன்முறை வெடித்தது. ஐரெங் மற்றும் கர்ம வைபெய் கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அடையாளம் தெரியாத மர்மநபர் பொதுமக்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். இதில் படுகாயமடைந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.