விருதுநகர்: விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கனகபிரபு என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று 51 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சங்கு சக்கரம் மற்றும் புஸ்வாண பட்டாசுகளுக்கு குல்லூர்சந்தையை சேர்ந்த சங்கிலி (45) மருந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெடிகளுக்கு மருந்து நிரப்பிய பின்னர் வெடிகளை ஒதுக்கியுள்ளார். அப்போது மருந்து உராய்வினால் தீப்பிடித்து அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. படுகாயமடைந்த சங்கிலி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் ஆலையின் போர்மென் சாந்தகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஒருவர் பலி
0