சென்னை: நேற்று இரவில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி 230, பெருங்குடி 169, அரும்பாக்கம் 134, வேலூர் 123, ராயபுரம் 121, கொடுங்கையூர் 112, கடலூர் 112, மணலியில் 109 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.