சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 38 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் மட்டும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சைக்கு வந்த நிலையில் 7 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.