குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு சொந்தமான வானவெடி தயாரிக்கும் ஆலை காவிரி ஆற்றங்கரை அருகே உள்ளது. நேற்று இந்த குடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று வான வெடி வெடித்து சிதறியது.
இதில் திருவாவடுதுறை மேலபுதுத்தெருவைச் சேர்ந்த கர்ணன் (25) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். லட்சுமணன் (45), கலியபெருமாள்(52), குமார் (37) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சிஅ பலனின்றி லட்சுமணன் நேற்றிரவு உயிரிழந்தார். கலெக்டர் மகாபாரதி, எஸ்பி ஸ்டாலின் மற்றும் குத்தாலம் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.