சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (05.09.2024) கொளத்தூர், நேர்மை நகரில் தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், உதவி ஆணையர் (குடிமைப் பொருள் வழங்கல்) ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர், நேர்மை நகரில் தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் பா. கணேசன்,இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் (வடக்கு) கே. எஸ். நரேந்திரன் நாயர், இ.கா.ப., சென்னை மேற்கு காவல் துறை இணை ஆணையர் டாக்டர் பி.விஜயகுமார், இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், இ.ஆ.ப.,கொளத்தூர் காவல் துணை ஆணையர் ஆர்.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் முருகன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வடசென்னை ப.பி.லோகநாதன், மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஸ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.