குலசேகரம்,ஆக.28: குலசேகரம் அருகே உள்ள திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஷா. இவர் தனது வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை ரப்பர் ஷீட் உலர் கூடமாக பயன்படுத்தி வருகிறார். நேற்று இந்த ரப்பர் உலர் கூடம் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்துள்ளது. உடனடியாக தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினர் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில் சுமார் ₹10 ஆயிரம் மதிப்புள்ள ரப்பர் ஷீட்கள் எரிந்து நாசமானது.