Monday, March 4, 2024
Home » தீயணைப்பு துறையில் பணியில் உள்ள முன்னணி வீரரின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்க அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தீயணைப்பு துறையில் பணியில் உள்ள முன்னணி வீரரின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்க அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by MuthuKumar

சென்னை: தீயணைப்புத் துறையில் உள்ள முன்னணி வீரர்களின் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் சிலர் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர், 2019ம் ஆண்டு மார்ச் 27ம் தேதிக்கு முன்பு தீயணைப்பு முன்னணி வீரர்களாக பணிமூப்பு பெற்றவர்களை தொந்தரவு செய்யாமல் மற்றவர்களின் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த பணிகளை 12 வாரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை என கூறி முன்னணி தீயணைப்பு வீரர்கள் எம்.இளங்கோவன், எஸ்.சுப்பையா ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, தீயணைப்புத் துறை இயக்குநர் ஆபாஷ் குமார் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், டி.குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 4 வார கால அவகாசம் வேண்டுமென்று அரசு தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

nineteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi