திருவனந்தபுரம்: எர்ணாகுளத்தில் கையால் முழம் போட்டு பூ விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பெரும்பாலும் பூ வியாபாரிகளிடம் ஒரு முழம் பூ வேண்டும் என்று கேட்டால் அவர்கள் கையால் தான் அளந்து கொடுப்பார்கள். ஆனால் அளவியல் துறையின் சட்டத்தில் ஸ்கேல் வைத்து அளந்தோ அல்லது தராசில் எடை போட்டோ தான் பூ விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை உள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அளவியல் துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். பெரும்பாலும் பூக்கடைகளில் சோதனைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. ஆனால் இந்த வருடம் பூக்கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். எர்ணாகுளத்தில் நடந்த சோதனையில் கையால் முழம் போட்டு அளந்து பூ விற்பனை செய்த 6 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.