ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வுப்பணி நடந்து வருகிறது. 2ம் கட்ட அகழாய்வு முடிவில் சுடுமண் உருவப் பொம்மை, கல்பந்து, மண்சட்டி உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மணி, முத்திரை, சதுரங்க ஆட்டக்காய்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
இதுகுறித்து அகழாய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை அகழாய்வில் நமது முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில், வணிக முத்திரை கிடைத்துள்ளது. மேலும், சதுரங்க ஆட்டக்காய்களும் கிடைத்துள்ளது’’ என்றனர்.