சென்னை: போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் பைனான்சியர் ககன் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் குடியிருக்கும் வீட்டை 10 ஆண்டுக்கு லீசுக்கு எடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது. போலி ஆவணம் தயாரித்து நீதிமன்றத்தில் அளித்ததாக பைனான்சியர் ககன் போத்ரா மீது புகார் எடுக்கப்பட்டுள்ளது.