சென்னை: 2022-23 நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது; மீதமுள்ள 167 பேருந்துகள் 2024 நவ.க்குள் பயன்பாட்டுக்கு வரும். எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், 2023-24 நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.446.60 கோடி ஒதுக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 நிதியாண்டில் 833 பஸ்கள் இயக்கத்துக்கு வந்துள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்
previous post