சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. தேவநாதன் உள்பட 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.