திருத்தணி: திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்குவிளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.25,000 எம்எல்ஏ நிதி உதவி வழங்கினார். திருத்தணி நகரம் காந்தி ரோட்டில் உள்ளது டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கு, 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, தன் சொந்த செலவில் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.25,000 திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியத்திடம் சட்டமன்ற அலுலவகத்தில், வைத்து நேற்று வழங்கினார்.