பெங்களூரு: பெங்களூரு மானக்சா ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நாட்டின் 78வது சுதந்திர தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வர் சித்தராமையா தேசிய கொடி ஏற்றி வைத்து பேசியதாவது, ‘மாநிலத்தின் கிரக லட்சுமி, சக்தி, கிரக ஜோதி, அன்னபாக்யா, யுவநிதி திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு, நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநிலங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. ,இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதிமன்றத்தில் முறையிட்டு நிதி பெறும் சூழல் உள்ளது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்.
ஒன்றிய அரசிடம் இருந்து நியாயமாக நமது மாநிலத்திற்கு நிதி கிடைக்கவில்லை என்றாலும் மாநில அரசின் சார்பில் வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நலனிற்கான திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்’ என்றார்.