சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன வடுகப்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து, மேக்ஸி கேப் வாகனம் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும் சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு
0