அவனியாபுரம்: அதிமுக தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு என்பது, இறைவன் கையில் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னையிலிருந்து நேற்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கூட்டுறவுத்துறை என்பது மிக முக்கியமானது. எனவே அவர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சாதிய வன்கொடுமை பிரச்னைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் நீட்டுக்கும், இதற்கும் முடிச்சு போடுவது சரியல்ல. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாததுதான் என்பதுதான் எங்களின் நிலையான கருத்து. அதிமுக தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் இறுதி தீர்ப்பு, இறைவன் கையில்தான் உள்ளது’’ என்றார்.