சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பேரனும் மற்றும் நடராஜ், கவி நடராஜ் ஆகியோரின் மகனுமான ஆதித்யனுக்கும், வேலூர் பாலாஜி, ஜானகி பாலாஜி ஆகியோரின் மகள் டாக்டர் பிரீத்திகா பாலாஜிக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் திருமணம் சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடந்தது. இதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர்கள் டி.ராஜேந்தர், பிரபு, ராம்குமார், நடிகை ரம்பா, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஷோபா சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன், கல்பாத்தி எஸ்.அகோரம், மதுரை அன்புச்செழியன், ரவி கொட்டாரக்கரா, ஏவிஎம் கே.சண்முகம், அபிராமி ராமநாதன், உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நேற்று மாலை 7 மணியளவில் அதே மண்டபத்தில் மணமக்கள் ஆதித்யன்- டாக்டர் பிரீத்திகா பாலாஜியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், அரசியல் கட்சி தலைவர்கள் கி.வீரமணி, திருமாவளவன், ஏ.சி.சண்முகம், சீமான், ஜி.கே.வாசன், அன்புமணி, நடிகர்கள் சரத்குமார், சூர்யா, நாசர், எஸ்.ஜே.சூர்யா, கே.பாக்யராஜ், பிரசாந்த், தியாகராஜன், சாந்தனு, சிபிராஜ், உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வீணை ராஜேஷ் வைத்யாவின் இசை கச்சேரி நடந்தது.