ராஞ்சி: இந்திய விமான படையின் போர் விமானத்தில் இருந்து கீழே விழுந்த பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரானில் ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. அந்த பகுதியில் இந்திய விமான படை போர் விமானம் ஒன்று நேற்று சென்றது. அப்போது விமானத்தில் இணைக்கப்பட்ட பொருள் கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இந்திய விமான படை தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமான படை தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்து விழுந்த பொருள் என்ன என்பது குறித்து விமான படை எநத் தகவலையும் வெளியிடவில்லை.
போர் விமானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்
previous post