மதுரை: வரலாற்று அழித்தொழிப்புகளை தனது சாதனை என்று வெளிப்படையாகவே கூறிவரும் பாஜவின் நிபுணர்களிடமிருந்து கீழடி உண்மையை காப்பாற்றவே போராடி வருகிறோம் என, சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், ‘‘ஒன்றிய பாஜ அரசு கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவை என்றும், நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் தான் திருத்தம் கேட்கிறோம் என்று வலியுறுத்துவதற்கும் காரணம் இது தான். வரலாற்று அழித்தொழிப்புகளை தனது சாதனை என்று வெளிப்படையாகவே கூறிவரும் பாஜவின் நிபுணர்களிடமிருந்து கீழடி உண்மைகளை காப்பாற்றவே நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘கீழடி உண்மைகளை காப்பாற்ற போராட்டம்’
0