புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சஞ்சீவ் கிர்வார் மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா. கடந்த ஆண்டு டெல்லியில் தடகள வீரர்கள் பயிற்சி செய்யும் விளையாட்டு மைதானத்தில் தங்கள் நாயை நடைபயிற்சி கூட்டி செல்வதற்காக மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்களை ரிங்கு துக்கா வௌியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சஞ்சீவ் கிர்வார் லடாக் பகுதிக்கும், ரிங்கு துக்கா அருணாச்சலபிரதேசத்துக்கும் மாற்றப்பட்டனர். அங்கு அருணாச்சலபிரதேச உள்நாட்டு விவகாரங்களுக்கான முதன்மை செயலாளராக ரிங்கு துக்கா நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரிங்கு துக்காவுக்கு அரசு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.