தருமபுரி: கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என தருமபுரி ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். “தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அதனை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு நடவடிக்கை. கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய கும்பல் பரிகம், நெக்குத்தி உள்ளிட்ட கிராமங்களில் அடுத்தடுத்து சிக்கினர். செங்குணம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி கிராமத்திலும் கருவின் பாலினத்தை கண்டறிந்த கும்பல் பிடிபட்டது. கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய முருகேசன், சின்னராஜ், கற்பகம் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” தருமபுரி ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.