நன்றி குங்குமம் தோழி
எல்லா ஊர்களிலும் சுலபமாக கிடைக்கக் கூடிய கீரை வகைகளில் அகத்திக் கீரையும் ஒன்று. இந்தக் கீரை நம் உடலுக்கு பலவித பலன்களை அளிக்கக்கூடியது.
*எலும்பு பலம் பெற்று வளரவும், உடல் வளர்ச்சி பெறவும் சுண்ணாம்புச் சத்து தேவை. அந்த சத்து அதிகமாகக் கொண்டது இந்தக் கீரை. அகத்திக் கீரையை சாம்பார், பருப்புக் குழம்பு, கூட்டு, பொரியல் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் சுண்ணாம்புச் சத்தை பெறலாம். உணவில் அடிக்கடி இக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயோதிக பருவத்தில் கூட எலும்பு உறுதியாக இருக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
*அகத்திக்கீரை வாய்வை உண்டு பண்ணக்கூடியதாக இருந்தாலும், அத்துடன் பெருங்காயம், பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்வு அகன்று விடும்.
*மூளை சம்பந்தமான நோய்களான புத்தி மந்தம், சோம்பல், அறிவுத் தடுமாற்றம், ஞாபக சக்தி குறைபாடுகளுக்கு இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் பூரணமாக குணமாகும்.
*உடல் மெலிந்து இருப்பவர்கள் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் ‘ஏ’ சத்து பெற்று பலம் பெற்று வாழலாம்.
*பல் வளர்ச்சி ஏற்படவும், பல் சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்க வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து நிறையவே உள்ளன இந்தக் கீரையில்.
*அகத்திக் கீரையை உணவில் சேர்ப்போம். உடல் பலம் பெற்று வளமுடன் வாழ்வோம்.
– எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.