நீலகிரி: நீலகிரி பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட முக்கட்டி பகுதியில் தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பெண் புலி உயிரிழந்துள்ளது. 2 புலிகள் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 புலிகள் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.