நாமக்கல்: பேளுக்குறிச்சி பெண் எஸ்.எஸ்.ஐ. இறப்புக்கு பணிச்சுமை காரணம் அல்ல என நாமக்கல் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். பேளுக்குறிச்சி காவல் நிலையத்தின் ஓய்வறையில் இறந்த நிலையில் பெண் எஸ்.எஸ்.ஐ. காமாட்சி மீட்கப்பட்டார். பணிச்சுமையால் எஸ்.எஸ்.ஐ. காமாட்சி உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மைக்கு மாறானது. எஸ்.எஸ்.ஐ. காமாட்சியின் இறப்பு குறித்து விசாரணை முடிவில் முழு விவரம் தெரிய வரும் என்று கூறினார்.
பெண் எஸ்.எஸ்.ஐ. மரணம் – நாமக்கல் எஸ்.பி. விளக்கம்
0