சென்னை: பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை அளித்ததாக விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பெண் நீதிபதி ஒருவரை, பின்தொடர்ந்து, மனஉளைச்சல் ஏற்படுத்திதாகவும், அவதூறு விளைவித்ததாகவும், நீதித்துறை நடவடிக்கைகளில் குறுக்கிட்டதாகவும் குற்றம் சாட்டி விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு வழக்கறிஞர் சிவராஜ் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர், தமிழ்நாடு மற்றும் அனைத்து மாநில நீதிமன்றங்கள், அனைத்து தீர்ப்பாயங்களில் ஆஜராக தடைவிதிக்கப்பட்டுள்ளது.