பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு விவகாரம் எஸ்.வி.சேகர் சரணடைவதில் இருந்து 4 வாரம் உச்ச நீதிமன்றம் விலக்கு
புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசன்னா.பி.வராலே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா, எந்த விசயமாக இருந்தாலும் ஒரு நிதானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டாமா? ஒரு தகவலை பகிர்வதற்கு முன்னர் அதனை சரியாக பார்த்திருக்க வேண்டாமா என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில்.இருந்து எஸ்.வி.சேகர் சரண்டைவதில் இருந்து நான்கு வார காலத்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.


